தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

சர்வதேச அகதிகள் நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி...

DIN

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.

ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், லட்சக்கணக்கான மக்கள் உயிரைக் காத்துக்கொள்ள தங்களின் சொந்த ஊர்களைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச அகதிகள் நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள். மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்.

நமது அரசு “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம். வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம். போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

49 வயதில் அம்மாவுக்கு எம்பிபிஎஸ் சீட்! மகளும் பொதுப்பிரிவில் போட்டியில் இருக்கிறார்!

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்!

லூடோ காதலி... கீர்த்தி சுரேஷ்!

SCROLL FOR NEXT