பிரதிப் படம் ENS
தமிழ்நாடு

காதலி வீட்டில் தலித் இளைஞர் தூக்கிட்டு தற்கொலையா? நயினார் நாகேந்திரன் எழுப்பும் கேள்வி!

குலசேகரத்தில் பட்டியலின இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாதென பாஜக வலியுறுத்தல்

DIN

கன்னியாகுமரியில் காதலியின் வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு, மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ், தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை.

கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில்தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது.

ஆகையால், இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு.

அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது.

ஆளுங்கட்சிக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலைபட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது. ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள்தான் உள்ள நிலையில், ஆளும் திமுகவின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன். மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தினருடன் பாஜக உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

SCROLL FOR NEXT