ஆ. ராசா(கோப்புப்படம்)  
தமிழ்நாடு

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

DIN

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடி சொத்துகள் சேர்த்ததாக 2015-ல் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இவ்வழக்கில் திங்கள்கிழமை ஆஜரான ஆ.ராசா, குற்றச்சாட்டு பதிவு செய்தற்கு முன் வழக்கில் இருந்து தன்னை விடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

அதனால் இன்று இவ்வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்ரேல் - ஈரான் போர்: கடும் சரிவில் பங்குச் சந்தை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சேதமடைந்த சக்கரத்துடன் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

ரூ.2,000-க்கு விற்கப்படும் கூலி டிக்கெட்..! நியாயமா இதெல்லாம்?

மோடியால் முடியாததை இந்த மு.க.Stalin சாதித்துவிட்டார் என்ற வயிற்றெரிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு

கூலி டிரெண்டில் இணைந்த சிங்கப்பூர் காவல்துறை!

SCROLL FOR NEXT