பாமக எம்எல்ஏ அருள். கோப்புப்படம்
தமிழ்நாடு

பாமக கட்சிப் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்!

பாமக கட்சிப் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டது தொடர்பாக...

DIN

பாமக சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெடித்தது.

அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, ராமதாஸ் தலைமையில் இன்று(ஜூன் 25) நடைபெற்ற பாமக கூட்டத்தில் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பாமக சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரவணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க. சரவணன் இன்று (ஜூன் 25) புதன்கிழமை முதல் நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள, பாட்டாளி மக்கள் கட்சியின், அனைத்து நிலை நிர்வாகிகளும், முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 700 கிலோ வெண்கலத்தாலான கருணாநிதி சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT