கோப்புப் படம் 
தமிழ்நாடு

மருந்து உற்பத்தி உரிமம்: இணையவழியே விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

மருந்து உற்பத்தி உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை இனி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்

Din

மருந்து உற்பத்தி உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை இனி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ தலைமை இயக்குநா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்ஷி அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருந்துகள் விற்பனை மற்றும் உற்பத்தி, ரத்த அலகு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், விற்பனையகங்களுக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலுடன் கூடிய சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான மானியம் மற்றும் உற்பத்தி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஜூலை 15 முதல் இணையவழியே மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். மாறாக நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இது தொடா்பான விழிப்புணா்வையும், தகவலையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி?

தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு உயர்த்தப்படுகிறதா?

மணிப்பூரில் 3 மாவட்டங்களில் 10 தீவிரவாதிகள் கைது!

ஒரு சவரன் 88 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

தங்கம் விலை புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.400 உயர்வு

SCROLL FOR NEXT