ராஜேந்திர பாலாஜி (கோப்புப்படம்) X
தமிழ்நாடு

முதல்வர் பதவி யாருக்கு? தவெகவுடன் கூட்டணியா? - ராஜேந்திர பாலாஜி பதில்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று(வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ்நாட்டின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். இது கூட்டணி தலைமை ஏற்றுக்கொண்ட முடிவு. இதில் பிரிகேடியர், கட்டளைத் தளபதி இபிஎஸ்தான். அவரது கருத்தே இறுதியானது. அவர் சொல்வதுதான் இறுதி முடிவு. கூட்டணி, இடப்பங்கீடு போன்றவற்றை அவர்தான் முடிவு செய்வார்.

அமித் ஷாவிடம் எந்தச் சூழலில் கேள்வி கேட்கப்பட்டது , அவர் என்ன சூழலில் பதில் சொன்னார் என்று தெரியவில்லை. அதிமுகவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் என்றால் அது இபிஎஸ் ஆட்சிதான், இபிஎஸ்தான் முதல்வர். அதற்கான காலங்கள் இருக்கிறது. அமித் ஷா நேரம் வரும்போது தெளிவாகச் சொல்லலாம் என்று இருந்திருக்கலாம்" என்றார்.

மேலும் தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி,

"தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணியில் தவெக வருவதற்கான வாய்ப்புகளும் நகர்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தவெக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கண்டிப்பாக இல்லை என்று சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.

மேலும், "திமுகவை எதிர்க்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும், ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முடிவில்தான் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது கருத்துக்களும் செயல்களும் அப்படித்தான் இருக்கின்றன. திமுகவை எதிர்க்கின்ற, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கின்ற அத்தனைக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவருடைய பணி வெற்றியடையட்டும்.

திமுக அணியிலும் எல்லோரும் சந்தோஷமாக இல்லை. மன வருத்தத்தில் உள்ளனர். தேர்தல் அறிவித்த பிறகும்கூட கூட்டணி மாறிய வரலாறு தமிழகத்தில் உள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணி பலமாக வல்லமையுடன் தெம்பாக இருக்கிறது. இதில் கல்லைத் தூக்கிப் போட்டுக் குழப்பிப் பிரிக்க திமுக சூழ்ச்சி செய்கிறது. அது நடக்காது" என்றார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும், அதிமுகவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Former AIADMK minister Rajendra Balaji has said that there is a possibility of merging vijay's Tamilaga vetri kazhagam with the National Democratic Alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT