எரிவாயு அடுப்பு 
தமிழ்நாடு

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம்: விரைவில் அமல்!

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படவுள்ளது தொடர்பாக....

DIN

சென்னயில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை, 7 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம், ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மேற்படி உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரம் AG&P பிரதம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 222 பகிர்மாண நிலையங்கள் மற்றும் 7 லட்சம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் பணியினை 8 வருடங்களில் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக, சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், சென்னையில் 8 இடங்களில் எரிவாயு குழாம் அமைக்கும் பணியை மேற்கொள்ள டிட்கோவுக்கு(TIDCO) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 27 இடங்களில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் 8 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு கடலோர கண்காணிப்பு ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூா், சேப்பாக்கம், ராயபுரம், தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா், எண்ணூா் ஆகிய பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

A project to distribute gas to homes through pipelines in 8 locations in Chennai will be implemented soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

SCROLL FOR NEXT