ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு  படம் : எக்ஸ்
தமிழ்நாடு

ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தது பற்றி...

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரம்மாண்ட ஸ்டுடியோ கட்டியுள்ளார்.

இந்த ஸ்டுடியோவை நேரில் பார்வையிட வருமாறு மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் விடுத்த அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்படவில்லை என்றும், அண்மையில் மத்திய அரசின் குறும்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்கச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

”உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டுடியோவை ஏ.ஆர். ரஹ்மான் கட்டியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் என்ற முறையில் நேரில் சென்று பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தில்லியில் குடியரசுத் துணைத் தலைவரை நடிகை மீனா சந்தித்தது பேசுபொருளான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Union Minister of State L. Murugan met and spoke to music composer A.R. Rahman in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

பணவரவு யாருக்கு இன்று: தினப்பலன்கள்!

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

ஆடி கிருத்திகை: பெரம்பலூா் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT