முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 58,000 கனஅடி!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 58,000 கனஅடியாக நீடிக்கிறது.

Updated On : 30 ஜூன், 2025 at 3:29 AM
மேட்டூர் அணை - DIN
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்வரத்து 58,000 கனஅடியாக நீடிக்கிறது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தணிந்து வருவதாலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும் நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58,000 கனஅடியாக சரிந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58,000 கனஅடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 26,000 கனஅடி நீரும் உபரிநீராக உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 32,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்இருப்பு 93.47 டி எம் சியாக உள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையில் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

நீர்வரத்து திடீரென அதிகரித்தால் உபரி நீர் போக்கி மதகுகளைஉயர்த்தி நீரை வெளியேற்றும் வகையில் நீர்வளத்துறை பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். உபரி நீர் போக்கி கால்வாய் பகுதிகளில் யாரேனும் குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளை குளிப்பாட்ட, செல்பி எடுக்க செல்கிறார்களா என்பதை போலீஸாரும் வருவாய் துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.

Summary

The water inflow to Mettur Dam remains at 58,000 cubic feet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments