தமிழ்நாடு

சட்டம் - ஒழுங்கு: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் தொடர்பாக...

DIN

சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூன் 30) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், காவல் துறை இயக்குநர் (நிருவாகம்) ஜி. வெங்கட்ராமன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ. அருண், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி வருகிறார்.

அதேபோல், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு முதல்வா் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் பேசியிருந்தார்.

இந்த நிலையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக காவல் துறை உயர் அலுவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜூன் 30) ஆலோசனை நடத்தினார்.

A review meeting on law and order was held today (June 30) at the Chennai Secretariat under the chairmanship of Chief Minister Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

SCROLL FOR NEXT