impress
தமிழ்நாடு

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி..

DIN

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

மேட்டூர் அருகே கருமலை கூடலில் செம்பன்(75) என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மக்னீசியம் சல்பேட் என்ற ரசாயனம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரவு 11 மணியளவில் ரசாயன தொட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து கருமலை கூட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தின்போது பணியில் இருந்த நங்கவள்ளியை சேர்ந்த ராஜா கவுண்டர் (56), கருமலை கூடல் பகுதியை சேர்ந்த முருகன்(54) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT