சென்னை பேருந்துகள்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

புறநகர் ரயில்கள் ரத்து: சென்னை பயணிகள் கவனத்திற்கு!

சென்னையில் நாளை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

DIN

சென்னையில் நாளை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக என்று நான் எங்கும் சொல்லவில்லை: அண்ணாமலை விளக்கம்

சென்னை எழும்பூா் - கோடம்பாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) அதிகாலை 5.10 முதல் மாலை 4.10 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இரு மாா்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனினும் பயணிகளின் வசதிக்காக மாா்ச் 9 அதிகாலை 4.10 முதல் மாலை 4.55 மணி வரை தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே இரு மாா்க்கத்திலும் 30 நிமிஷங்கள் இடைவெளியில் மொத்தம் 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

70 வயதானவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை!

கரூர் சம்பவம்: தவெக நிர்வாகிகள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனை: சென்னையில் பணம், தங்க நாணயம் பறிமுதல்

சாலைகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க தலா ரூ.1, 000 வசூலிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மீனவர்கள் பிரச்னை: வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்துவேன்

SCROLL FOR NEXT