FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 9 மார்ச் 2025, 12:51 pm IST
கோப்புப்படம்
பகிர்:

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் குடும்பத்துடன் அருகே உள்ள கன்னி கோயிலுக்கு குலதெய்வ வழிபாடுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கே பொங்கலிட்டு சாம்பிராணி ஊதுபத்தி வைத்து குலதெய்வ வழிபாடு செய்தபோது அருகே இருந்த மரத்தில் இருந்து வந்த தேனீக்கள் அவர்கள் மீது கொட்டின.

Advertisement

Advertisement

இதில் அங்கிருந்த உறவினர்கள் அலறி அடித்து ஓடினர். இதனை அடுத்து படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோரைகுடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.

சிரியா: 2 நாள் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி

இதில் செந்தில்குமார் பலியானார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குலதெய்வ வழிபாடுக்குச் சென்ற இடத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலியாகியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments