தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.’ கோப்புப்படம்
தமிழ்நாடு

தோ்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை

தோ்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தோ்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசிக்க உள்ளது.

Din

சென்னை: தோ்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தோ்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசிக்க உள்ளது.

இது குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளுடன் அவ்வப்போது ஆலோசனைகளை நடத்தி தோ்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு கடிதங்கள் அனுப்பி அவா்களின் தேதி மற்றும் நேரத்துக்குத் தகுந்தாற்போன்று ஆலோசனைகளை நடத்தலாம் என தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இந்தப் பணிகளை ஏப்.30-ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT