கோவையில் காட்டு மாடு தாக்கி வனக்காவலர் பலி!
காட்டு மாடு தாக்கி வனக்காவலர் பலி தொடர்பாக....
கோவையில் காட்டு மாடு தாக்கி வனக்காவலர் அசோக் குமார் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தடாகம் வனப்பகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு மாட்டை விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் கடந்த 10-ம் தேதி ஈடுபட்டிருந்தனர்.
அந்த காட்டு மாடு தோலம்பாளையம் வனக்காவலர் அசோக் குமாரைத் தாக்கியதில் அசோக்குமார் படுகாயமடைந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஹோலி பண்டிகை: மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறை உத்தரவு!
படுகாயமடைந்த அசோக்குமாருக்கு சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாள்கள் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 12) காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.