ஸ்மார்ட் மீட்டர் 
தமிழ்நாடு

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

DIN

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், மின் இழப்பைத் தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீ்ட்டர் திட்டத்தை நிறைவேற்றவும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதற்காக தமிழக அரசு, ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதாவது 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செயப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக, மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரியுள்ளது. 6 கட்டமாக மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று கூறியுள்ளது.

ஒரு மாதத்தில் டெண்டர் நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT