ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் இளையராஜா. உடன் தங்கம் தென்னரசு 
தமிழ்நாடு

இளையராஜாவின் திரை இசைப் பயணத்தைக் கொண்டாட அரசு முடிவு! -முதல்வர் ஸ்டாலின்

இளையராஜாவின் திரை இசைப் பயணத்தைக் கொண்டாட அரசு முடிவு..

DIN

இளையராஜாவின் திரை இசைப் பயணத்தைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ (valiant) எனப் பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்து இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனையையும் செய்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோவுடன் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இசைஞானி இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். இளையராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்.

லண்டன் மாநகரில் சிம் பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இளையராஜா அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பெயின் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப்!

அழகான அதிகாரம்... ஜனனி!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

SCROLL FOR NEXT