கோப்புப்படம்  TNIE
தமிழ்நாடு

சென்னை: பார்க்கிங் இல்லையா? இனி கார் வாங்க முடியாது!

வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்படவுள்ளது.

DIN

சென்னையில் வாகன நிறுத்தத்திற்கான இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. நகரப் பகுதிகளுக்குள் பத்து கிலோ மீட்டர் பயணிக்க ஒரு மணிநேரத்துக்கு மேலாகிறது.

அதிகளவிலானோர் பொதுப் போக்குவரத்தை தவிர்த்து சொந்த வாகனத்தில் பயணிப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணமாக உள்ளது.

இதனிடையே, குடியிருப்புப் பகுதிகளில் கார்களை நிறுத்த இடமின்றி சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதால் பலருக்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் காவல்துறைக்கு வந்துகொண்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக, இனி சென்னையில் கார் வாங்குவோர் சொந்த நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்ற விதிமுறையைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் அளித்துள்ளது.

புதிதாக கார் வாங்குவோர், காரை நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் குறித்த சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட கார் வாங்குபவர்கள், எத்தனை கார் வாங்குகிறார்களோ, அதற்கான நிறுத்துமிடச் சான்றிதழ் வழங்குவது அவசியம்.

புதிய விதிமுறைகளுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!

ரூ.58,100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரப்பெற்றோம் (03-09-2025)

39 வயதில் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்! சிக்கந்தர் ராஸா அசத்தல்.!

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

SCROLL FOR NEXT