தமிழ்நாடு

பட்ஜெட்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு!

Tamil Nadu Budget 2025 | 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்...

DIN

பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பத்திரப்பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

"ரூ. 10 லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்.

மகளிர் தொழில் முனைவோரை உருவாக்க நடவடிக்கை. சுமார் 1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.

இதுதொடர்பாக அமைச்சர் பேசியதன் முழு விவரம்:

மகளிர்க்கு சம சொத்துரிமை வழங்கிடும் சட்டத்தை கடந்த 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் கருணாநிதி வகுத்துத் தந்த பாதையில் வெற்றிநடை பயின்றிடும் திராவிட மாடல் அரசு தமிழ்ச் சமூகத்தில் மகளிருக்கான உயர் இடத்தையும், உரிய அதிகாரத்தையும் உறுதி செய்திடும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்திடும் வகையில் வரும் 01-04-2025 முதல், 10 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும்.

இதன் மூலம் மகளிரின் சுயசார்பும் மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதியென பல்வேறு முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் அடுத்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் விற்பனைக்கான 2025-26 ஆம் ஆலோசனைகளும் வழங்கப்படும். ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியுதவிக்கென 225 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

SCROLL FOR NEXT