தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ. 3.58 லட்சம் கோடி பயிர்க் கடன்!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்...

DIN

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

வேளாண் துறையுடன் கால்நடைத் துறை, மீன்வளத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

பேரவையில் பேசிய அவர்,

"2021-24 வரை 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2 ஆம் இடத்தில் உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

1,000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதுவரை 30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

ஹேக்கிங் என்பது என்ன? எப்படி நடக்கிறது?

SCROLL FOR NEXT