முகப்பு
தமிழ்நாடு

த.வெ.க. நெல்லை மாவட்டச் செயலர் சஜி மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் எச்சரித்தும்..

த.வெ.க. நெல்லை மாவட்டச் செயலாளர் சஜி மாரடைப்பால் மரணம் மரணமடைந்தார்.

Updated On : 15 மார்ச், 2025 at 8:16 AM
விஜய் உடன் சஜி
பகிர்:

மருத்துவர்கள் எச்சரித்தும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த த.வெ.க. திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளருமான சஜி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது நண்பரை சந்திக்க நேற்று இரவு சென்றுள்ளார், நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் மரணமடைந்தார்.

10 நாள்களுக்கு முன்பாக சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, ரத்த சர்க்கரையின் அளவு 400க்கு மேல் இருந்துள்ளது. அப்போது, மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என்று சஜியை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், சஜி அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

முன்னதாக, கடந்த 13 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சஜி கலந்து கொண்டார். விஜய்-யை சந்தித்து தூத்துக்குடியில் த.வெ.க. கட்சியின் வளர்ச்சி குறித்தும் விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →