எடப்பாடி பழனிசாமி  கோப்புப்படம்.
தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

DIN

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பேரவைத் தலைவர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி நடத்திவரும் ஆலோசனையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த முறையும் பங்கேற்கவில்லை.

வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பேரவை திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

கேள்வி நேரம் முடிந்ததும், நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்குகின்றன. இதில், திமுக, அதிமுக உள்பட பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா்.

கச்சத்தீவு திருவிழா நிறைவு: மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

இந்த விவாதங்களுக்கான பதிலுரை வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) அளிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT