திருவள்ளூர் அமேசான், ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை! தரமில்லாத பொருள்கள் பறிமுதல்!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பொருள்களின் தரத்தினை சோதிக்கும் மத்திய தர நிர்ணய அதிகாரிகள் இன்று திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல கொடுவள்ளி பகுதியில் உள்ள ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்கிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
பிஐஎஸ் முத்திரை இல்லாத குடிநீர் பாட்டில்கள், பொம்மைகள், சீலிங் ஃபேன்கள் என தரமில்லாத ரூ. 36 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் கடந்த சில நாள்களாக சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.