கோவை - திருப்பதி ரயில் 
தமிழ்நாடு

மகிழ்ச்சியான செய்தி! கோவை - திருப்பதி ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைப்பு

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. கோவை - திருப்பதி ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைப்பு

DIN

கோவை : கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கோவை - திருப்பதி ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி வரும் எல்.எச்.பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்ட தூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகிறது.

சாதாரண ரயில் பெட்டிகளை விட இந்தப் பெட்டிகளில் கூடுதலாக பயணிகள் பயணம் செய்யலாம், மற்ற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் அதிவேகமாக இயக்க சௌகரியமாக இருக்கும்.

ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும், சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின் போது ஒரு பெட்டி, மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது. இந்தப் பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அத்துடன் சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். எல்.எச்.பி. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 80 இடங்களும், ஏ.சி. பெட்டியில் படுக்கை வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும்.

ஏற்கனவே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த நவீன பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்பொழுது கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் பொருத்தி இன்று முதல் இயக்கப்பட்டது.

காலை 6:10 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 1.25 மணிக்கு திருப்பதியை சென்றடையும், வாரந்தோறும் செவ்வாய், வியாழன் , வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

திருப்பதியில் இருந்து இந்த ரயில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு கோவை வந்தடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT