தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். கோப்புப்படம்
தமிழ்நாடு

அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை!

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

Din

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் குறைகளைக் கேட்டறிய அனைத்து மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரிகளையும் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையும் கோரியிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கருத்துகளை அறிய அா்ச்சனா பட்நாயக் முடிவு செய்து, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தாா். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 12 கட்சிகள் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன.

இந்தக் கட்சியின் நிா்வாகிகள் அா்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனா். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குளறுபடி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக தங்களின் கோரிக்கைகளை தோ்தல் அதிகாரியிடம் அவா்கள் முன் வைக்கவுள்ளனா்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT