தமிழக அரசு 
தமிழ்நாடு

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Din

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும் தொழில்முனைவோரை உருவாக்கவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன்கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையும், செம்மறி ஆடுவெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும், பன்றி வளா்ப்புப் பண்ணை அமைக்க ரூ.15 முதல் ரூ.30 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தனிநபா், சுய உதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளா்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள், ஆகியன விண்ணப்பிக்க தகுதியானவா்கள்.

இதுகுறித்து முழுமையான விவரங்களை இணையதளத்தில் அறியலாம். மேலும், விவரங்களுக்கு கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலா்கள், தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலா்கள் ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT