தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனால் அரசுப் பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் ஏப்.2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாள் ஏப்ரல் 1-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அன்று வாடிக்கையாளர் பரிவர்த்தனை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.