தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..

DIN

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு இன்று நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT