சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.
ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம், புழல், வியாசர்பாடி, ராயப்பேட்டை, பூந்தமல்லி, மதுரவாயல், திருமுல்லைவாயில் என பல்வேறு இடங்களுக்குமானதாக சென்னையில் மட்டும் மாதவரம் பகுதியில் உள்ளது முக்கிய சந்தை.
ஆனால், ஒரு சில நாள்களே உள்ள நிலையில், தற்போது வரை சுமார் 3,000 ஆடுகள் மட்டுமே விற்பனையாகியிருப்பதாகவும், 30,000க்கும் மேற்பட்ட ஆடுகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்து இங்கு விற்பனைக்கு வைத்திருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் வரை விற்பனை களைகட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும், 5 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கும் என நினைத்து வந்த வியாபாரிகள் இந்த சந்தையில் தற்போதுவரை விற்பனை மிகவும் மந்தமான முறையில் நடந்து வருவதால் ஆட்டுச் சந்தைக்கு வந்திருக்கம் வியாபாரிகள் மன குமுறலுடன் இருக்கிறார்கள்.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக வியாபாரம் செய்ய சென்னைக்கு வந்திருக்கக் கூடிய வியாபாரிகள், இதுவரை விற்பனை சூடுபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். வெயில் காரணமாக இருக்கலாம், அல்லது வார இறுதி நாள்களில் விற்பனை சூடுபிடிக்க வாய்ப்பிருக்கலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய ரமலான் பண்டிகைக்காக இன்று மட்டும் 80 லட்சம் ரூபாய் மட்டுமே தற்போது வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மனவேதனை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. பி.எஃப். பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி விரைவில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.