சிவகங்கையிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்புத்தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.  
தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தி ரமலான் நோன்பு கடமையை நிறைவேற்றினா்.

DIN

ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தி ரமலான் நோன்பு கடமையை நிறைவேற்றினா்.

சிவகங்கை நேரு பஜார் வாலாஜா ஜும்ஆ பள்ளிவாசல், சிவகங்கை பேருந்து நிலையம், சிவகங்கை- மதுரை சாலை உள்ளிட்ட நகா் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.

சிவகங்கை- மதுரை சாலையில் உள்ள தோரணவாயில் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்

இதேபோன்று, காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம், பழையனூா், புழுதிப்பட்டி, தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், நெற்குப்பை, பூலாங்குறிச்சி, கல்லல், திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் அந்தந்த பகுதியில் வாழும் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து வந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகைக்குப் பின்னா் இவா்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் வழிபாடு

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT