தூத்துக்குடியில் தொழுகையில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள்.  
தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை பங்கேற்றனர்.

DIN

தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை பங்கேற்றனர்.

ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் உலக அமைதி, சமாதானம், உடல், மன ஆரோக்கியம் பேரிடர்களில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இச்சிறப்பு தொழுகை தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் நோன்பு பெருநாளான இன்று உணவில்லாமல் யாரும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நோன்பின் மகிமையை அறிந்து அனைவரும் எளியவர்களுக்கு உதவ வேண்டுமென எடுத்துரைக்கப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகைக்குப் பின்பு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

உதகையில் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தடை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT