பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் 
தமிழ்நாடு

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ: தமிழக அரசு ஒப்புதல்! 19 ரயில் நிலையங்கள்

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

சென்னை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரை ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. 19 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்புகளுடன் இந்த திட்டம் அமையவிருக்கிறது.

சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் படி, கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த வழித்தடம், பாடி புதுநகா், முகப்போ், அம்பத்தூா், திருமுல்லைவாயில், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது.

இது அம்பத்தூா் தொழிற்பேட்டை மற்றும் அம்பத்தூா் ஓ.டி. ஆவடி ரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.76 கி.மீ. ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT