கோப்புப்படம் ENS
தமிழ்நாடு

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்!

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு.

DIN

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 11, 12 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

விழுப்புரத்தில் இருந்து காலை 9.25-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06130) காலை 11.10-க்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15-க்கு விழுப்புரம் சென்றடையும். இதில் 8 மெமு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06131) இரவு 10.45-க்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மே 12, 13- ஆகிய தேதிகளில் அதிகாலை 3.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06132) காலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சலூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT