சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,025 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வர்த்தகம் நிறைவுபெறும்போது இன்று மாலை மீண்டும் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 9,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ரூ.72,200-க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்து ரூ.72,800 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.8,900 ஆகவும், ஒரு சவரன் ரூ.71,200 ஆகவும் விற்கப்பட்டது. இன்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ. 1, 000 உயர்ந்தது. ஆனால் மாலையில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,600 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர். வரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.