ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!
இன்றைய தங்கம் விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 6) சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்து ரூ. 72,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்துவந்த நிலையில், மே 3-ஆம் தேதி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 8,755-க்கும், சவரன் ரூ. 70,040-க்கும் விற்பனையானது.
அதைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 8,775-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்து ரூ. 72,200-க்கும் கிராமுக்கு ரூ. 125 உயர்ந்து ரூ. 9,025-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 107.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 100 குறைந்து ரூ. 1,07,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.