சிவகங்கை அருகே போதிய சாலை வசதி இல்லாததால் தோட்டம் மற்றும் கால்வாய் வழியே சிரமத்துடன் உடலை சுமந்து சென்ற திருமன்பட்டி கிராம மக்கள். 
தமிழ்நாடு

சாலை வசதியின்றி மயானத்துக்கு உடலை எடுத்துச்செல்ல சிரமப்படும் கிராம மக்கள்!

பாலம் அமைத்துத்தர கிராம மக்களின் கோரிக்கை தொடர்பாக...

ஆா்.மோகன்ராம்

சிவகங்கை: சிவகங்கை அருகே மயானத்துக்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தையொட்டி பெரியாறு பாசனக்கால்வாய் அமைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 25 அடி ஆழமும் சுமார் 6 அடி அகலத்தில் கால்வாய் தோண்டப்பட்டு அதில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த 78 வயதான மூதாட்டி திங்கள்கிழமை காலமான நிலையில், பிற்பகலில் அவரது உடலை மயானத்துக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்ய அவரது உறவினர்களும் கிராம மக்களும் 25 அடி பள்ளத்தில் இறங்கி மறுபுறம் சிரமத்துடன் ஏறி மயானத்துக்குக் கொண்டு சென்றனர்.

இந்த ஊரின் மயானத்துக்கு போதிய சாலை வசதி இல்லாததால், வயல்வெளி மற்றும் தோட்டம் ஆகியவைகளின் வழியாக சுமந்து சென்று இறுதிச்சடங்கை நிறைவேற்றினர்.

இது குறித்து திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகர் கூறியதாவது: எதிர்பாரமல் இறந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கை மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது.

பெரியாறு பாசன கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை கடந்து செல்ல பாலம் இல்லாததால் இந்த சிரமம் ஏற்பட்டது. கால்வாய் பணிகள் முடிய எவ்வளவு மாதங்கள் ஆகும் எனத் தெரியவில்லை. அதுவரை இந்தக்கால்வாயைக் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களின் துயரம் தீரும் என்றார் அவர்.

இதையும் படிக்க: போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

SCROLL FOR NEXT