மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி நாளை(மே 10) இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், ஞாயிறு காலை 7.55 மணிக்கு மதுரை சென்றடைகிறது.
மறுமார்க்கமாக மே 12ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
சித்திரைத் திருவிழா நிகழ்விற்காக சென்னை-மதுரை இடையே முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.