கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் ரத்து!

நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் ரத்து தொடர்பாக...

DIN

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பின் நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் முறை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற்ற பிறகு முடிவெடுக்க சரியாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை தேர்வுத் துறை எடுத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நேற்று(மே 8) வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வு எழுதியதில் 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 26,877 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம்: முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

நியூசி.க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அஜீத் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மெட்ரோ ரயிலில் வித் லவ் பட விளம்பரம்! ரசிகர்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT