நாளை உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலினின் உதகை பயணம் குறித்து...
முதல்வர் ஸ்டாலின் நாளை(மே 11) உதகை செல்கிறார்.
நாளை உதகை செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் மே 15 ஆம் தேதி அங்கு நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை தொடக்கி வைக்கிறார். தொடர்ந்து பட்டா வழங்கும் விழா, பழங்குடியின மக்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார்.
கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் 20- ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி திங்கள்கிழமை (மே 12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் 127-ஆவது உதகை மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதையடுத்து குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் கண்காட்சி மே 30, 31 ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.