அண்ணா பல்கலை. (கோப்புப்படம்) Din
தமிழ்நாடு

சிறப்பு அரியர் தேர்வு: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

அரியர் வைத்திருப்பவர்களுக்கான சிறப்புத் தேர்வு தொடர்பாக....

DIN

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் பட்டப் படிப்பு பயின்ற மாணவா்களில் நீண்ட காலமாக அரியர் வைத்துள்ளவா்கள் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கால உச்சவரம்பைக் கடந்து அரியர் பாடங்களை வைத்திருப்போர் ஏப்ரல் - மே 2025 சிறப்புத் தேர்வு, ஜூன் - ஜூலை 2025 சிறப்புத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்த சிறப்பு அரியா் தோ்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் http://coe1.annauniv.edu என்ற இணைய தளத்தில் வரும் மே 17 ஆம் தேதிக்குள் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள், கால அட்டவணை குறித்த அறிவிப்புகள் மே 27 ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ரயிலைக் கவிழ்க்க சதி: வட மாநில நபர் கைது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளியின் பைக்கை பறித்து சென்ற 2 இளைஞா்கள் கைது

கடையநல்லூா், புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

ஓட்டுநரை தாக்கி நகை பறித்த 5 போ் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

7 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT