புறநகர் மின்சார ரயில் கோப்புப்படம்
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

கும்மிடிப்பூண்டி செல்லும் 18 மின்சார ரயில்கள் ரத்து தொடர்பாக...

DIN

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி, சூளூர்பேடை செல்லும் 18 புறநகர் மின்சார ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி - சூளூர்பேடை இடையே செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து குறித்து திடீரென அறிவிப்பு வெளியானதால் பயணிகள் தவித்து வருகின்றனர். இதனால் பயணிகள் பலர் பேருந்து, ஆட்டோ போன்றவற்றின் மூலம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT