முகப்பு
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறை!

மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறை திறப்பு.

Updated On : 14 மே, 2025 at 3:20 PM
தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறைகள்
பகிர்:

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தையுடன் பயணிக்கும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டுமே பாலூட்டும் அறை திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பரவலாக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை இனிவரும் காலங்களில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பதிவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →