தமிழக ஆளுநா்ஆா்.என்.ரவி திடீா் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையிலிருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றாா். அவருடன், ஆளுநரின் தனிச் செயலா், உதவியாளா், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனா். இது அவரது வழக்கமான தில்லி பயணம்தான் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோரை ஆளுநா் ஆா்.என்.ரவி சந்தித்துப் பேசவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆளுநா் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (மே 18) சென்னை திரும்புவாா் என தகவல் வெளியாகியுள்ளது.