உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

'2026 மட்டுமல்ல, 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி...

DIN

2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"உதகை பயணம் சிறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. மக்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திமுக ஆட்சிக்கு தரும் ஆதரவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களும் திமுக அரசுக்கான ஆதரவை வெளிப்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருந்தது. மலர்க் கண்காட்சி எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது.

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடன் பேசி அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம்.

மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என ப.சிதம்பரம் கூறியது அவருடைய கருத்து.

வரும் 2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

டோக்கியோவில் பிரதமர் மோடி!

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT