மாணவி சுபஸ்ரீ. 
தமிழ்நாடு

10 வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து பொள்ளாச்சி மாணவி முதலிடம்!

கோவை மாவட்ட பொள்ளாச்சி மாணவி சுபஸ்ரீ முதலிடம்.

DIN

கோவை பொள்ளாச்சி மாணவி சுபஸ்ரீ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தபடி, இன்று(மே 16) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்ற இந்தத் தேர்வுகளின் முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்வில், பொள்ளாச்சி அருகே உள்ள சிறுக்களந்தை விக்னேஸ்வரா தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

அவர் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். குறிப்பாக, நான்கு பாடங்களில் முழுமையான 100/100 மதிப்பெண்களைப் பெற்று உள்ளார். தமிழ் பாடத்தில் மட்டும் அவர் 99 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தவெற்றியின் மூலம், சுபஸ்ரீ மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது இந்தச் சாதனைக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பொள்ளாச்சி வட்டாரத்தில் இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT