பிரதிப் படம் ENS
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் புதிதாக 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

DIN

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வரும்நிலையில், தற்போது வரையில் மாணவர் சேர்க்கை சுமார் 1.8 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களின் நலன்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மார்ச் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட முதல் 20 நாள்களிலேயே 14 வேலைநாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர். இது கடந்தாண்டைவிட அதிகமாகும்.

கடந்தாண்டில் 3.34 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்த நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை இலக்கை 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறக்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT