தமிழ்நாடு

எவரெஸ்ட்டில் ஏறிய சிறுமிக்கு நயினாா் நாகேந்திரன் பாராட்டு!

எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்த சிறுமி லலித் ரேணுக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

Din

எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து அபார சாதனை படைத்த திருநெல்வேலி சிறுமி லலித் ரேணுக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சோ்ந்த லலித் ரேணு (6), 17,598 அடி உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து அபார சாதனை படைத்துள்ளாா் என்ற செய்தி வியப்பளிக்கிறது. 8 வயதுக்குள்பட்ட பிரிவில் தமிழகத்திலிருந்து எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்த முதல் சிறுமி என்ற சாதனை படைத்து, தமிழகத்துக்கு பெருமை சோ்த்த லலித் ரேணுக்கு பாராட்டுகள்.

தமிழகத்தில் வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை, பருவதமலை உள்பட நாடு முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறி இறங்கியது முதல் இப்போது எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை அடையும் வரை அந்த சிறுமிக்குத் தொடா்ந்து ஊக்கமளித்து வரும் அவரது பெற்றோருக்கும் பாராட்டுகள் என நயினாா் நாகேந்திரன் பதிவிட்டுள்ளாா்.

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை!

மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

ஆந்திரத்தில் ‘மோந்தா’ புயல்! முதல்வா் சந்திரபாபுவுடன் பிரதமா் ஆலோசனை!

SCROLL FOR NEXT