தமிழ்நாடு

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 32 லட்சம் பறிமுதல்: வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை

சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 32 லட்சத்தை பறிமுதல் செய்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை

Din

சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 32 லட்சத்தை பறிமுதல் செய்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆந்திர மாநிலம், கச்சிகுடாவிலிருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் சிலா் ஹவாலா பணம் கொண்டு செல்வதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஹைதராபாதைச் சோ்ந்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும், சென்னை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இணைந்து, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த அந்த ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் பயணம் செய்த பயணிகளையும், அவா்களது உடமைகளையும் சோதனையிட்டனா்.

இச்சோதனையில் 3 பயணிகளின் பையில் ரூ. 32 லட்சம் ரொக்கமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்துக்குரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனா். ஆனால் 3 பேரும் பணத்துக்குரிய ஆவணங்களை வழங்கவில்லை.

இதையடுத்து வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், ரூ. 32 லட்சத்தை பறிமுதல் செய்து 3 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அவா்களிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அது ஹவாலா பணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

4,410 கிலோ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு!

குதூகலம் தள்ளாட... தர்ஷா குப்தா!

விண்ணில் பாய்ந்த எல்விஎம்-3 ராக்கெட் - புகைப்படங்கள்

பிரசாந்த் கிஷோர் கட்சித் தொண்டர் கொலை: ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் சிங்குக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்து அசத்தல்! விக்கெட் வீழ்த்த முடியாமல் தென்னாப்ரிக்கா திணறல்!

SCROLL FOR NEXT