சென்னை விமான நிலையம் கோப்புப் படம்
தமிழ்நாடு

சென்னை விமான நிலையம்: 3 மாதங்களில் ரூ. 1 கோடிக்கு அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான தங்கக் கட்டிகள், ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்த உடைமைகளில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான தங்கக் கட்டிகள், அரசால் தடை செய்யப்பட்ட ட்ரோன்கள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறானவற்றை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து, பாதுகாப்பு சோதனைக்கு முன்னதாக, அவற்றை விமான நிலையத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.

இவ்வாறு தலைமறைவாகும் கடத்தல்காரர்களை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT