உதகை தொட்டபெட்டா சிகரம் (கோப்புப்படம்)  
தமிழ்நாடு

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவது பற்றி...

DIN

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா மலைச் சிகரம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா மலைச் சிகரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நாளை(மே 25) ஒருநாள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாள்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தம் செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்திலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

சீனாவில் பிரதமா் மோடி: ஷி ஜின்பிங்குடன் இன்று பேச்சு!

பாமக கூட்டணிக்கு வரும்: இபிஎஸ்

துவரங்குறிச்சியில் விஏஓ கணவா் மா்மச் சாவு

SCROLL FOR NEXT